புதுச்சேரி, காரைக்கால் அடுத்த நெடுங்காடு செருமாவிளங்கை கிராம், ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா ( 24 ). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கார்த்திக் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.