தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது - nagapattinam district news

மயிலாடுதுறை: பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்,

தினேஷ்
தினேஷ்

By

Published : Apr 21, 2021, 3:25 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் 1 படித்து வரும் மாணவி கடந்த 12ம் தேதி தனது தோழியை பேருந்து ஏற்றி விட்டு வருவதாகக் கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் பெண் வீடு திரும்பாததால், அவரை பல இடங்களில் பெற்றோர், உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதனையடுத்து ர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கங்கனம்புத்தூரை சேர்ந்த தினேஷ் (21) மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து தினேஷை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சாலையில் கிடந்த சிசு: போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details