இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞர் கைது! - இருசக்கர வாகனங்கள் திருட்டு
மயிலாடுதுறை: சீர்காழி பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல்துறையினருக்கு புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து காவல்துறையினர் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த முகமதுரியாஸ் (24) என்பதும், சீர்காழி பகுதியில் நான்கு இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த சீர்காழி காவல்துறையினர் அவரிடம் இருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.