நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48). இவர் வண்டிக்காரத் தெருவில் ஜவுளிக்கடை வைத்து நடத்திவருகிறார். கடந்த 11ஆம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டிச்சென்றுள்ளார்.
மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்ததில் கல்லாவில் இருந்து இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் திருடுபோயிருப்பது தெரியவந்தது.
Youth arrested for stealing money from Mayiladuthurai, மயிலாடுதுறை ஜவுளிக்கடையில் பணம் திருடிய இளைஞர் கைது இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் சிங்காரவேலு தலைமையில் விசாரணை செய்த காவல் துறையினர், கடந்த மாதம் வரை ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வேலையை விட்டு நின்ற கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திக்(28) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வங்கியில் பணம் செலுத்த வந்த பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை