தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் டவர் பேட்டரி திருடிய இளைஞர் கைது - cell phone tower battery Theft

மயிலாடுதுறை: சீர்காழி அருகே செல்போன் டவரிலிருந்து பேட்டரி திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Youth arrested for stealing cell phone tower battery
Youth arrested for stealing cell phone tower battery

By

Published : Aug 12, 2020, 10:43 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயில் கிராமத்தில் சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் டவர் அமைந்துள்ள இடம் பராமரிப்பின்றி செடி, கொடிகள் நிறைந்து புதர்போல் இருக்கிறது.

இதனை நோட்டமிட்ட ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்திகுமார் என்பவர் டவருக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியை திருட வந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மூர்த்தியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வைதீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து மூர்த்திகுமாரை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details