தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வன்புணர்வு செய்து பள்ளி மாணவி கொலை - போக்சோவில் இளைஞர் கைது! - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து கொலைசெய்த பக்கத்துவீட்டு இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

மாணவியை கொலை செய்த கல்யாணசுந்தரம்

By

Published : Nov 10, 2019, 1:04 PM IST

Updated : Nov 10, 2019, 1:32 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தமிழரசன். இவரது மகள் கவிதா(15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு படித்துவருகிறார்.

பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய கவிதாவை காணவில்லை என அக்கம் பக்கம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். பின்னர் தோட்டத்தின் பின்புறமுள்ள பகுதியில் கவிதா இறந்து கிடந்ததைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மாணவியை கொலை செய்த கல்யாணசுந்தரம்

இது குறித்து கவிதாவின் தந்தை தமிழரசன் திருவெண்காடு காவல்துறையில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கவிதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் கல்யாணசுந்தரம் (30), மாணவியை பாலியல் பலத்காரம் செய்து கழுத்தை நெறித்துக் கொலை செய்ததது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க :நண்பனைக் கொன்று வாட்ஸ்அப்பில் வாக்குமூலம்: குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு!

Last Updated : Nov 10, 2019, 1:32 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details