தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரொம்ப டென்ஷன் ஆனா போலீசை போடுவேன்'- கெத்து காட்டிய இளைஞர் கைது! - முகநூலில் கொலை மிரட்டல்

நாகப்பட்டினம்: ரொம்ப டென்ஷனா இருந்தால் போலீசை போடுவேன் என்று பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை காவலர்கள் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

youth-arrested-for-murder-threats-to-police
youth-arrested-for-murder-threats-to-police

By

Published : Jun 13, 2020, 9:40 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு பூதங்குடியை சேர்ந்தவர் சிவா (24). இவர் தனது பேஸ்புக் (முகநூல்) பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் காவல்நிலையத்தின் வரவேற்பாளர் பகுதியில் நின்றுகொண்டு காவலர் தொப்பியை அணிந்தவாறு எடுக்கப்படிருந்தது.

அத்துடன் அந்தப் புகைப்படத்தின் கீழ், 'போலீஸ் ஸ்டேஷனிலிருந்து யாராவது தொப்பியை போட முடியுமா! நான் போடுவேன்! ரொம்ப டென்ஷன் ஆனா போலீசையும் போடுவேன்!! என குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அவர் தனது நண்பருடன் தண்ணி அடிப்பது போன்று உள்ள மற்றொரு புகைப்படத்தை செல்ஃபி எடுத்து, அதன் கீழ் இந்த ஜென்மத்தில் எவனும் எங்கள ஒன்னும் பண்ண முடியாது.. ஓ.கே.. எனவும் எழுதி வெளியிட்டார்.

அந்தப் புகைப்படங்கள் மணல்மேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஹானிஸ் உசேன் வாட்சப்பிற்கு பார்வார்ட் செய்தியாக வந்துள்ளது.

இதையடுத்து மணல்மேடு காவல்துறையினர் சிவா மீது வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் கொலை: பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details