நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொழையூர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் மகன் பிரவின்ராஜ் (23). இவர் மயிலாடுதுறையில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்த பெண்ணை 2017ஆம் ஆண்டிலிருந்து காதலித்துவந்துள்ளார்.
அவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளனர். அப்பெண் எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கேட்டபோது, ஒரு வருடம் போகட்டும் என்று தள்ளிக்கொண்டே வந்துள்ளார்.
இதையடுத்து வசதி குறைந்த இடத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று பிரவின்ராஜ் பெற்றோரும் கூறிவிட்டதால், பிரவின்ராஜ் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.