நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள திருவிடைமருதூரைச் சேர்ந்தவர் ரூபன்(24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி காவ்யாவுக்கும் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டுள்ளது. காவ்யா குத்தாலம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் கடந்த 20 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாணவியை ரூபன் கடத்திச் சென்றதாக மாணவியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.