தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலிப்பதாக கூறி மாணவி பாலியல் வன்புணர்வு- போக்சோவில் இளைஞர் கைது - மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் வன்புணர்வு

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு ஒருவர் கைது  youth arrest in pocso act for sexual harassment  pocso act  sexual harassment  crime news  mayiladuthurai news  mayiladuthurai latest news  youth arrest in pocso act for sexual harassment in mayiladuthurai  மயிலாடுதுறை செய்திகள்  பாலியல் வன்புணர்வு  போக்சோ  மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் வன்புணர்வு  குற்றச் செய்திகள்
மாணவிக்கு பாலியல் வன்புணர்வு

By

Published : Jul 24, 2021, 10:16 AM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா மருதம்பள்ளம் கீழவெளியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ஐயப்பன் (22), செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை வீட்டில் இருந்து ஐயப்பன் கடத்திச்சென்றுள்ளார். பின் மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

கட்டடத் தொழிலாளியான ஐயப்பன்...

இது குறித்து, சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி, ஐயப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.2 கோடி மோசடி- பிடிபட்ட கேடி தம்பதியினர்

ABOUT THE AUTHOR

...view details