மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் கிராமம் சொக்காயி அம்மன் கோயில் திடலில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் பந்தயம் நடத்துவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தகவலறிந்தததும் துணை ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது காவல் துறையினரைக் கண்டதும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 16 இளைஞர்கள் கிரிக்கெட் மட்டைகளை கீழே போட்டு விட்டு தப்பியோடினர். அவர்களை காவல்துறையினர் விரட்டிப்பிடித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர்களிடமிருந்து 16 இருசக்கர வாகனங்கள், கிரிக்கெட் விளையாட பயன்படுத்திய 7 கிரிக்கெட் மட்டைகள், ஸ்டம்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.