கள்ளக்குறிச்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (21). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக
பணிபுரிந்து வருகிறார். தனக்குத்தெரிந்த நபரிடம் அவர் கந்து வட்டிக்குப் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் சேர்த்து அதிகமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடன் கொடுத்த நபர் மேலும் வட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த தினேஷ்குமார் தனது பிரச்னையை வீடியோவாகப் பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டார்.