நாகப்பட்டினம்:மயிலாடுதுறையில் உள்ள இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் இவரின் மகன் பிரபாகரன் (21).அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் துபாயில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிறுனத்தில் பணியாற்றுவதற்காக பிரபாகரன் கடந்த 2019 ஆம் ஆண்டு துபாய் சென்றுள்ளார்.
அங்கு பணியாற்றி வந்த நிலையில் கடந்த மே மாதம் வீட்டிற்கு தொலைபேசி மூலம் பேசிய பிரபாகரன் நிறுவனத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டியதால் தன்னை நிறுவனத்தினர் சாப்பாடு, சம்பளம் கொடுக்காமல் கொடுமைபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதே மாதம் 21ஆம் தேதி பிரபாகரன் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரபாகரன் குடும்பத்தாரிடம், ‘பிரபாகரனை காணவில்லை’ என தகவல் தெரிவித்துள்ளார்.