தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளி கைது - girl child sexual harassment in nagappattinam

நாகப்பட்டினம்: 13 வயது மதிக்கத்தக்க சிறுமியை வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கட்டட தொழிலாளி
கட்டட தொழிலாளி

By

Published : Nov 5, 2020, 11:15 AM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி தமிழ்ச்செல்வன் (20). இவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

சிறுமியின் உடல் தோற்றத்தில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர், இது தொடர்பாக அவரிடம் கேட்டுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வன் தன்னிடம் பலமுறை தவறாக நடந்து கொண்டதாகச் சிறுமி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!

ABOUT THE AUTHOR

...view details