மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதுத்தெருவில் உள்ளது. இந்தச் சாலையின் ஒரு பகுதி கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சேதமடைந்துள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், துறை அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அதே தெருவில் வசிக்கும் மெயில்சங்கர் என்ற இளைஞர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் பிச்சை எடுத்து நிதி திரட்டினார்.
சாலையைச் சரிசெய்ய நிறைமாத கர்ப்பிணியுடன் வீதிவீதியாகப் பிச்சை கேட்ட இளைஞர் பொதுமக்களிடம் பிச்சை எடுத்த தம்பதி
அப்போது, அவ்வழியாகச் சென்ற திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம். முருகனின் காரை மறித்து சாலையைச் சரிசெய்ய பிச்சை கேட்டனர். காரை விட்டு இறங்கிய எம். முருகன் இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறும், விரைவில் அந்தச் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து, தம்பதியினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சாலையைச் சரிசெய்ய நிறைமாத கர்ப்பிணியுடன் வீதிவீதியாகப் பிச்சை கேட்ட இளைஞர் மேலும் அதுவரை திரட்டிய நிதியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, அங்கு நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸிடம் அளித்து, சேதமடைந்த சாலையைச் செப்பனிட வலியுறுத்தினார். அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறையினரை அழைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: Fisherman rajkiran case: மீனவர் ராஜ்கிரண் சுட்டுக்கொல்லப்பட்டாரா? தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு