தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணி காதலியை கரம்பிடிக்க மறுத்த இளைஞர் கைது! - Young man arrested for refusing to marry pregnant woman

மயிலாடுதுறை அருகே கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது
கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது

By

Published : Jul 16, 2021, 8:25 AM IST

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ராமு மகன் விக்னேஷ் (26). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர்.

விக்னேஷ் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் 5 வருடங்கள் பணியாற்றினார். அப்போது, உடன் பணியாற்றிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து, விக்னேஷை சந்தித்த இளம்பெண் தான் கர்ப்பமாக உள்ளதாகவும், திருமணம் செய்து கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் விக்னேஷ் திருமணம் செய்ய மறுத்ததோடு, கருவைக் கலைக்க சொல்லி இளம்பெண்ணை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி, விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details