மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுதாகர் (20). இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனது உறவினர் வீட்டில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.
17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் கைது - குழந்தை திருமணம்
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே 17 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட இளைஞரை குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின்கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!
இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், குழந்தைகள் திருமண தடைச் சட்டம், போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுதாகரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.