தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகுண்ட ஏகாதசி விழா: நாச்சியார் அலங்காரத்தில் அருள்பாலித்தார் பரிமள ரெங்கநாதர் - திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர்

மயிலாடுதுறை: வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 8ஆவது திருநாளை முன்னிட்டு, திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர், நாச்சியார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

yegathasi-pagal-pathu
yegathasi-pagal-pathu

By

Published : Dec 23, 2020, 3:39 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீபரிமள ரெங்கநாதர் ஆலயம். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஐந்து பஞ்ச அரங்க ஆலயங்களில் இது ஐந்தாவது ஆலயமாகும்.

திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவது திவ்ய தேசம் ஆகும். இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 8ஆவது திருநாளை முன்னிட்டு, நாச்சியார் அலங்காரத்தில் பரிமள ரெங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

yegathasi-pagal-pathu

அதைத் தொடர்ந்து திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடப்பட்டு, படியேற்ற சேவை நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு திருவந்திகாப்பு செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details