மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா வானகிரி மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரேணுகாதேவி அம்மன் கோயில் உள்ளது. இங்கு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று (டிச.5) சென்றுள்ளார். அவருக்கு கிராமத்தின் சார்பில் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின், சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது இந்திய கடற்படை தாக்குதலில் படுகாயம் அடைந்த வீரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனற கோரிக்கை மனுவை அளித்தனர்.