சர்வதேச யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவல்துறையினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், பெரம்பூர், பாலையூர் மற்றும் பாகசாலை காவல் நிலையத்திற்கு உள்பட்ட காவல்துறை அலுவலர்கள், 100-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தப் பயிற்சியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில், மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை முன்னிலையில் இன்று காலை நடைபெற்றது.