மயிலாடுதுறை:சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் என்ற மேற்கத்திய ஓவியக் கலையில், ஒரு மணி நேரத்தில் 70 வார்த்தைகள் 577 எழுத்துக்கள் கொண்ட பத்து திருக்குறளை மரக்கட்டையில் சூரிய ஒளி மூலம் எரித்து வரைந்து மயிலாடுதுறையைச் சார்ந்த இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர், விக்னேஷ். இவர் வெளிநாடுகளில் புகழ்பெற்ற கலையாக விளங்கும் “சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட்”என்ற கலையை ஆசியாவிலேயே முதல்முறையாக இந்தியாவில் அரங்கேற்றி வருகிறார். மரக்கட்டைகளில் லென்ஸ் மூலம் சூரியக் கதிர்களை ஒரே இடத்தில் குவித்து, அதில் தோன்றும் நெருப்பு மூலம் ஓவியம் வரைவது பர்னிங் வுட் ஆர்ட் ஆகும்.
இதன்படி, இளைஞர் விக்னேஷ் ஏற்கனவே காந்தி, விராட் கோலி, தோனி, ரோகித் சர்மா, சந்திராயன் 3 விண்கலம், டெஸ்லா, கடல் கொள்ளையன் ஜாக் ஸ்பேரோ, கடவுள் படங்கள், பெரியார், திருவள்ளுவர், சினிமா பிரபலங்களான விஜய், அஜித், தனுஷ், சிம்பு படங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.
இதையும் படிங்க:"தமிழகத்தில் எம்பிக்கள் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு சதி" - முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு