180ஆவது புகைப்பட தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள தனியார் (ஏவிசி) கல்லூரியில் காட்சி தகவல் தொடர்புத்துறை சார்பாக மாணவ மாணவியர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு புகைப்பட கண்காட்சி நடத்தினர்.
நாகை புகைப்படக் கண்காட்சி: மாணவ மாணவியரின் படைப்புகள் காட்சிக்கு வைப்பு
நாகப்பட்டினம்: 180ஆவது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி மன்னம்பந்தல் கல்லூரியில் தொடங்கியது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
14ஆவது ஆண்டாக இன்றும் நாளையும் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியில் இயற்கை, போர்ட்ரைட், சிற்பங்கள், கடற்கரை, வன உயிரினம், மலர்கள், பறவைகள், குழந்தைகள், பரீஸ் ப்ரேம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்ட தங்கள் படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதில் பழமையான டிஎல்ஆர் படக்கருவியைத் தீக்குச்சிகளைக் கொண்டு வடிவமைத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கருவி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படைப்புகள் மூலம் தங்கள் கற்பனை மற்றும், படைப்புத்திறன் மேம்படுவதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள், கண்காட்சியைப் பார்வையிட்டனர். சிறந்த படைப்புகள், பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில், பரிசுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளது.
TAGGED:
உலக புகைப்பட தின கண்காட்சி