தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இதுவும் திருவிளையாடல்...பட்டினப்பிரவேசம் குறித்து உலகிற்குத் தெரியவே இந்தத் தடை சம்பவம்' - தருமபுர ஆதீனம்

கிராமத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியினை உலகிற்கு தெரிவிப்பதற்காகவே இந்த ஆண்டு பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடை சம்பவத்தை கருதுவதாக தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் தெரிவித்துள்ளார்.

பட்டினபிரவேசம் உலகிற்க்கு தெரியவே இந்த தடை சம்பவம் - ஆதின மடாதிபதி பேட்டி
பட்டினபிரவேசம் உலகிற்க்கு தெரியவே இந்த தடை சம்பவம் - ஆதின மடாதிபதி பேட்டி

By

Published : May 23, 2022, 8:45 PM IST

Updated : May 23, 2022, 8:53 PM IST

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் சர்ச்சைக்குள்ளாகி தடை நீக்கப்பட்ட பாரம்பரியமான பட்டினப்பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் அதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறுகையில், 'தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமிக்க பட்டினப்பிரவேச விழா சிறப்பாக நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த முதலமைச்சர், பல்வேறு ஆதீனங்கள், ஜீயர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அனைவருக்கும் அருளாசி வழங்குகிறேன்.

ஆதீனம் தான் முதன்முதலில் கலைஞர்களுக்கு விருதுகொடுத்தது: பட்டினப்பிரவேச நாதஸ்வர கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விழாவாக, சமுதாய விழாவாக, ஆதீன மடங்களில் பட்டினப்பிரவேச விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு கலைஞர்களுக்கு விருதுகொடுப்பதற்கு முன்பாக, நமது ஆதீனங்கள்தான் முதன்முதலாக கலைஞர்களை தேர்வுசெய்து விருது கொடுத்து அவர்களை அறிமுகப்படுத்தியது.

நாதஸ்வர வித்வான்கள், இலக்கியத்துறையில் உள்ள அறிஞர்களை ஆதீனப் புலவர்களாகவும், இசைப்புலவர்களாகவும், நாதஸ்வர கலைஞர்காளாக்கி ஆதீனங்கள் விருது கொடுத்துள்ளனர். கிராமிய கலைஞர்கள் பட்டினப்பிரவேச நாளில்தான் தங்கள் இசைத்திறமையைக் காட்டுவார்கள்.

25ஆவது குருமகா சன்னிதானம் இருந்த காலத்தில் மனிதனை மனிதன் சுமக்கலாமா எனப் பெரியாரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதற்கு பெரியார் தமிழன் பல்லக்கில் வரவேண்டும் என்றுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அனைவரும் சென்று பல்லக்கு தூக்கும்படி அப்போது அவர் அறிவுறுத்தியதாகவும் அந்த ஆண்டும் தடையில்லாமல் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், ஆங்கிலேயர் ஆட்சிகாலம் முதல் பல்வேறு கட்சியினர் ஆட்சிபீடத்தில் இருந்தபோது இந்த பட்டினப்பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி தடையில்லாமல் நடைபெற்று வருகிறது.

'இதுவும் திருவிளையாடல்...பட்டினப்பிரவேசம் குறித்து உலகிற்குத் தெரியவே இந்தத் தடை சம்பவம்'

பட்டினப்பிரவேச விழா பற்றி உலகு அறிந்துகொள்ளவே இந்தாண்டு விதிக்கப்பட்ட தடை குறித்து கருதுகிறேன். இதுவும் இறைவனின் ஒரு திருவிளையாடல் தான்” என்றும் ஆதீன மடாதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க :தருமபுரம் ஆதீன பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி கோலாகலம்

Last Updated : May 23, 2022, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details