தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகூர் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு - இஸ்லாமியர்கள் ஏமாற்றம் - நாகூர் தர்காவில் தொழுகை செய்ய அனுமதி மறுப்பு

நாகை: உலகளவில் புகழ் பெற்ற நாகூர் தர்காவில் பக்தர்கள் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

World famous nagore dharga
நாகூர் தர்கா

By

Published : Sep 1, 2020, 11:32 AM IST

தமிழ்நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, நாகை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற நாகூர் தர்கா முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்வதற்கு ஏதுவாக தானியங்கி சானிடைசர் இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

நாகூர் தர்காவில் அனுமதி மறுப்பு

இதையடுத்து நாகூர் தர்காவில் தொழுகை நடத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. இதனால் தர்காவுக்கு இன்று அதிகாலை தொழுகை நடத்துவதற்கு வந்த இஸ்லாமியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நாகூர் தர்கா வெளியே இஸ்லாமியர்கள் துவா வழிபாடு

மதுரை, ஓசூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பூட்டப்பட்டிருந்த தர்கா வாசல் முன்பு, துவா வழிபாடு செய்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: சொத்து தகராறு: மாமனார், மாமியாரை தாக்கிய மருமகள்

ABOUT THE AUTHOR

...view details