நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பல்வேறு வேலைகள் பார்த்து வந்தனர். மேலும் மயிலாடுதுறையில் அஸாம் மாணவர்கள் சிலரும் தங்கியிருந்து கல்வி கற்றும் வருகின்றனர்.
இவர்கள் கரோனா பொதுஅடைப்பு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் தவித்துவந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு பொதுஅடைப்பில் சில தளர்வுகளை அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஒரு மாணவி உள்பட கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் மற்றும் 42 தொழிலாளர்கள் சிறப்பு பேருந்து மூலம் திருச்சி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த வழியனுப்பும் நிகழ்வில் தாசில்தார்கள் முருகானந்தம், சாந்தி மற்றும் வருவாய்துறையினர் கலந்துகொண்டனர். இந்த 45 பேரும், திருச்சியிலிருந்து ரயில் மூலம் சொந்த மாநிலம் திரும்புகின்றனர்.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா பாதிப்பு