தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டம் - Nagai Sugarcane Producers Struggle

நாகை: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனரை கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டம்
கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டம்

By

Published : Jan 21, 2020, 9:54 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு பகுதியில் நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமியின் கூட்டுறவு சர்க்கரை ஆலையானது 1987ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. இந்த ஆலையானது இந்தியாவிலேயே அதிக லாபத்தில் இயங்கிய ஆலை என்ற சான்றிதழையும் பெற்றது. நல்ல நிலையில் இயங்கிவந்த சர்க்கரை ஆலையை அதன் நிர்வாகத்தினர் 2007ஆம் ஆண்டு மூடிவிட்டனர்.

இருந்தும், கரும்பு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஆலையை இயக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து போராடிவருகின்றனர். இன்று ஆலையில் உள்ள எஞ்சிய 100 தொழிலாளர்களையும் வேறு ஆலைக்கு மாற்றுவதற்காக, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் சிவமலர் என்பவர் என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வந்தார்.

அப்போது கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க மாநில செயலாளர் காசிநாதன் தலைமையில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது என்றும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டம்

இதையும் படிங்க: குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details