சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நாகையில் உலகப் பெண்கள் தினம் மாநாடு நடைபெற்றது. கைம்பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில், கைம்பெண்களைப் பாகுபாடோடு நடத்துவதற்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையினை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பூ, பொட்டு வைத்துக்கொண்டு அசத்திய கைம்பெண்கள்! - கைம்பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சார்பில் நடைபெற்ற பெண்கள் தின மாநாடு
நாகை: கைம்பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சார்பில் நடைபெற்ற பெண்கள் தின மாநாட்டில் சுமங்கலி - கைம்பெண் பாகுபாட்டை நீக்கும் விதமாக, கைம்பெண்கள் அனைவருக்கும் பூ, பொட்டு வைத்து சிறப்பிக்கப்பட்டது.
![பூ, பொட்டு வைத்துக்கொண்டு அசத்திய கைம்பெண்கள்! Women's Day Conference held by widow Association](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6372209-thumbnail-3x2-ja.jpg)
Women's Day Conference held by widow Association
பூ, பொட்டு வைத்துக்கொண்ட கைம்பெண்கள்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், சுமங்கலி - கைம்பெண் பாகுபாட்டை நீக்கும் விதமாக கைம்பெண்கள் அனைவரும் பூ, பொட்டு வைத்து விழாவைச் சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: அரசு அருங்காட்சியகம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்