மயிலாடுதுறை:சீர்காழி தாலுகா தொடுவாய் என்னும் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அர்ச்சனா (26). இவருக்கும் வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த முருகப்பன் (28) என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், இரண்டரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். முன்னதாக திருமணம் நடைபெற்றபோது வரதட்சணை வேண்டாம் எனப் பேசி அர்ச்சனாவை முருகப்பன் திருமணம் செய்துள்ளார்.
ஆனால், திருமணம் முடிந்த பின்னர் ஆறு வருடங்களில் சிறிது சிறிதாக 18 சவரன் வரை வரதட்சணையாக முருகப்பன் குடும்பத்தினர் பெற்றுள்ளனர். பின்னர் இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மீண்டும் வரதட்சனை கேட்டுள்ளனர். ஆனால், அர்ச்சனாவின் குடும்பத்தினருக்கு மேலும் வரதட்சணை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அர்ச்சனாவின் குடும்பத்தினரை தங்கள் வீட்டுக்கு வரக் கூடாது என்றும் அதேநேரம் அர்ச்சனாவை அவரது பிறந்த வீட்டுக்கு அனுப்பாமலும் முருகப்பன் குடும்பத்தினர் இருந்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7) முருகப்பனின் உறவினர்கள் அர்ச்சனா குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அப்போது, ‘உங்களது மகள் அர்ச்சனா விஷம் குடித்து இறந்து விட்டார். எனவே அவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா குடும்பத்தினர், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.