தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டிய வீட்டிற்குள் சடலமாகக் கிடந்த பெண் - பெண் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறையில் பூட்டிய வீட்டிற்குள் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

விசாரணை
விசாரணை

By

Published : Dec 20, 2021, 2:37 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரைச் சேர்ந்தவர் மாலதி (52). இவர், ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மனைவி ஆவார். மாலதி மயிலாடுதுறை வெள்ளான் தெருவில் கல்யாணம் என்பவரது வீட்டு மாடியில் மூன்று மாதங்களாக வாடகைக்கு குடியிருந்துவந்தார்.

மாலதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த இரண்டு ஆண்டு ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார்.

இவரிடம் வீடு தரகர் ஸ்ரீதர் என்பவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, வீட்டின் உரிமையாளருக்கு மாதம் இரண்டாயிரத்து 500 ரூபாய் வாடகை கொடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீதர் பணத்தைத் திரும்பத் தர மறுப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மாலதி மனு அளித்தார். இதையடுத்து, மயிலாடுதுறை காவல் துறையினர் கடந்த 2ஆம் தேதி இருவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, 10 நாள்களில் வீட்டை காலி செய்துகொள்வதாகவும், வீட்டை காலி செய்தவுடன் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் இருவரிடமும் எழுதி வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் மாலதி வீட்டின் கதவு இரண்டு நாள்களாகத் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் கல்யாணம் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த மயிலாடுதுறை காவல் துறையினர் கதவை உடைத்துப் பார்த்தனர்.

அங்கு மாலதி தற்கொலையால் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணனின் நண்பர் - உடந்தையாக இருந்த அண்ணன் தலைமறைவு

ABOUT THE AUTHOR

...view details