தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீரில்லா காவிரி! ஆழ்துளை நீரில் ஆடிப்பெருக்கு - காவிரி ஆறு

நாகை: மயிலாடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால் ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் ஆழ்துளை நீரில் கொண்டாட வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர்.

cauvery

By

Published : Aug 3, 2019, 10:43 AM IST

ஆடி மாதத்தின் முக்கிய நிகழ்வான ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் காவிரி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் கரைகளில் புனித நீராடுவர். மேலும் இந்த விழாவிற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழாவிற்கு இம்முறை காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் காவிரி ஆறு தண்ணீரின்றி பொலிவிழந்து காணப்படுகிறது.

இதனால் பக்தர்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்காக நாகை மாவட்டம் மயிலாடுறை நகராட்சி நிர்வாகம் ஆழ்துளை மூலம் காவிரியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பியது.

ஆழ்துளை நீரில் ஆடிப்பெருக்கை கொண்டாடிய பக்தர்கள்

இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவான இன்று காலை துலாக்கட்டம் காவிரி நீர்த்தேக்க தொட்டி அருகே கூடிய ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் காவிரியை கன்னிப்பெண்ணாக கருதி, கருகமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழ வகைகளை வைத்து, ஆற்றில் மணல் எடுத்து படையலிட்டனர். பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.

காவிரியில் நீர் இல்லாததால் வழக்கத்தைவிட பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. மேலும் தண்ணீர் இல்லாத காவிரியில் புனித நீராட முடியாமல் பக்தர்கள் வருத்தத்துடன் திரும்பிச்சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details