தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை: இளைஞர் கைது! - மயிலாடுதுறை பெண் கொலை வழக்கு

மயிலாடுதுறையில், திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண்ணை கொலைசெய்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை
திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை

By

Published : Sep 24, 2020, 7:12 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண்ணை கொலைசெய்த இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

நாகப்பட்டினம் மயிலாடுதுறை அடுத்த சீர்காழி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி. இவர், அரசுப் பள்ளி தலைமையாசியராக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி சித்ரா (40). இவர் கடந்த 18 ஆம் தேதி விடியற்காலையில் வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்காக வெளியேவந்துள்ளார்.

அப்போது அங்குவந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர் தலையில் பலமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சீர்காழி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, நகை பறிப்பிற்காக இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதாவது முன்விரோதம் இருந்ததா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய காவல் துறையினர், நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்ததில், சீர்காழி சட்டநாதபுரத்தைச் சேர்ந்த ரியாஸ் (26) என்பவர் இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை இன்று (செப்.24) காவல் துறையினர் கைதுசெய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ரியாஸ் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பெண்னை கொலைசெய்த இளைஞர் கைது

மேலும், சித்ராவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததை சித்ரா கண்டித்துள்ளார். கள்ளக்காதலை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த ரியாஸ், சித்ராவை அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, காவல் துறையினர் ரியாஸிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: மனைவி கண்முன்னே கணவனை துவைத்தெடுத்த காதலன்!

ABOUT THE AUTHOR

...view details