மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள ஈசானிய தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்பொழுது அமுதா (37) என்ற பெண் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநில மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.