காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் கடத்தி வரப்பட்டு, வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சந்தேகத்தில் பேரில் நாகை அடுத்துள்ள செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவரது வீட்டில் காவல்துறையினர் நேற்று (பிப்.06) அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்புறம் சாராய மூட்டைகள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.