தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக பிரசித்திப்பெற்ற கோயிலுக்குச் செல்லும் சாலை இப்படியா இருப்பது? 'உச்' கொட்டும் பக்தர்கள் - government

நாகப்பட்டினம்: உலக பிரசித்திப்பெற்ற கோயிலுக்குச் செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும் குழியுமாக உள்ள சாலை

By

Published : May 10, 2019, 2:32 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரியில் உள்ளது உலகப் புகழ்பெற்ற உத்வாகநாத சுவாமி கோயில். இங்கு தினந்தோறும் திருமணப் பிரார்த்தனை நடைபெறும். இதில் கலந்துகொண்டு பிரார்த்தனையின்போது அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

உலக பிரசித்திப்பெற்ற கோயிலுக்குச் செல்லும் பழுதடைந்த சாலையை அரசு கவனிக்குமா?

எனவே திருமணத்தடை உள்ளவர்கள் நீண்ட நாட்களாக திருமண வரன் அமையாதவர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம்.

இந்நிலையில், இக்கோயிலுக்குச் செல்லும் வானாதிராஜபுரம் கடலங்குடியிலிருந்து திருமணஞ்சேரி செல்லும் மாற்று வழி சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மேலும், இது குறித்து பலமுறை அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து உலக பிரசித்திப்பெற்ற உத்வாகநாத சுவாமி கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க அரசு உதவ வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details