தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயில் மர்மமான முறையில் கணவர் உயிரிழப்பு.. உடலை மீட்க கோரி மனைவி மனு! - Karaikal Collector Office

Dubai Work: துபாயில் மர்மமான முறையில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தர, மனைவி கண்ணீர் மல்க காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

உடலை மீட்க கோரி மனைவி மனு
துபாயில் மர்மமான முறையில் கணவர் உயிரிழப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 7:48 AM IST

துபாயில் மர்மமான முறையில் கணவர் உயிரிழப்பு

காரைக்கால் :புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நெடுங்காடு பொன்பேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி சத்தியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீரமணி, அவரது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து, அதில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டின் சார்ஜா நகருக்கு தொழிலாளராக வேலைக்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்து, மீண்டும் துபாய் சென்ற வீரமணி, இனி துபாயில் வேலை பார்க்க வேண்டாம் என முடிவு செய்து, பொங்கலுக்கு வீடு திரும்புவதற்கு டிக்கெட் பதிவு செய்து விட்டேன் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மனைவியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஒருவர் தொலைபேசி மூலமாக அவரது மனைவியிடம், உங்களது கணவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும், இறந்த வீரமணியின் புகைப்படத்தையும் சத்யாவிற்கு அனுப்பியுள்ளனர். இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்த நிலையில், முகத்தில் ரத்தக்கசிவு காயங்களுடன் இறந்த புகைப்படத்தைப் பார்த்து மனைவி சத்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, இறந்த வீரமணியின் மனைவி சத்தியா, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் குலோத்துங்கனைச் சந்தித்து, தனது கணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். எனவே, அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவரது உடலை தூதரகம் மூலம் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சத்தியா தனது குழந்தைகளுடன் நின்று கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பொங்கலுக்கு தனது கணவர் வருவார், நிரந்தரமாக தங்களுடன் இருப்பார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த மனைவி மற்றும் அவரது பிள்ளைகளுக்கு, அவரது இறப்பு செய்தி கிடைத்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மைக்ரோசாப்ட்-டுடன் இணையும் தமிழக அரசுப்பள்ளிகள் - கரும்பலகையில் இருந்து செயற்கை நுண்ணறிவுக்கு முன்னேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details