தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றத்திலும் - சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகையில் இன்று விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விதவைப் பெண்கள் ஆர்ப்பாட்டம்! - Complete alcoholism
நாகை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Window protest in Nagai
இதில் 500க்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும், விதவைப் பெண்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.