நாகையில் நேற்று (அக். 4) 149 இடங்களில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பட்டமங்கலம், தேவூர் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி டெல்டா பகுதியில் முன்னோடி விவசாயியும், விவசாய சங்கங்களின் பிரதிநிதியுமான மன்னார்குடி ரங்கநாதன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திருத்தத்தை ஆதரிக்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகள் இது தொடர்பான போராட்டங்களை நடத்திவருகின்றனர். அதனால், அவர்கள் போராட்டங்களை கைவிட வேண்டும்” என்றார்.
அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்ச் சந்திப்பு மேலும், இந்தச் சட்டம் நன்மையா? தீமையா? என கேள்வி எழுப்பிய அமைச்சர், விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு அவர்களுக்கு ஏற்புடைய விலையில் எங்கு சென்றும் விற்பனை செய்யலாம் என்ற சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும், விலையை அரசு நிர்ணயம் செய்யக்கூடாது எனவும் அனைத்து எதிர்க்கட்சியினரும் கோரினார்கள். தற்போது விலை கூடுதலாக கிடைக்கும் இடத்திற்கு பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இது விவசாயிகளுக்கு நன்மையும், லாபத்தையும் ஏற்படுத்தி தரும் என்பதால் அதிமுக அரசு இதனை ஆதரிக்கிறது என்றார்.
இதையும் படிங்க...முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்: சாமியை அகற்ற சாமியிடம் வேண்டிய ஓபிஎஸ்!