நாகப்பட்டினம் மாவட்டம், புத்தகரம் முடிகொண்டான் ஆற்றில் பழுதடைந்துள்ள புத்தகரம் நீர்த்தேக்கத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகளை கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட 1,829 குடிமராமத்து பணிகள் செய்வதற்காக அரசு சுமார் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது" என்றார்.