தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்திலும் தமிழ்நாட்டிற்கு வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்! - ரயில்வே மின் மயமாக்கும் பணிகள்

நாகப்பட்டினம்: கரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் வேளையில், மேற்கு வங்கத் தொழிலாளர்கள் மயிலாடுதுறைக்கு அழைத்து வரப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்கள்
ஒப்பந்த தொழிலாளர்கள்

By

Published : Jun 21, 2020, 9:11 PM IST

கரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலர் அரசு செலவில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது கரோனா தொற்று தாக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் இன்று ( ஜூன் 21) மேற்கு வங்கத்தில் இருந்து 36 தொழிலாளர்கள் 2 தனியார் பேருந்து மூலம் மயிலாடுதுறை வந்தனர்.

இவர்களை கொள்ளிடம் சோதனைச் சாவடியில் அலுவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ரயில்வே மின்மயமாக்கும் பணியில் ஈடுபடக்கூடிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பதும்; குத்தாலம் பகுதியில் தங்கி ரயில்வே மின்மயமாக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக வந்ததும் தெரியவந்தது.

அவர்களுக்கு எந்தவித கரோனா பரிசோதனையும் செய்யப்படவில்லை என்பதை அறிந்த சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் இருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியதோடு, அவர்களை தரங்கம்பாடியில் உள்ள தனியார் இடத்தில் தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கரோனா பீதியில் மக்கள் முடங்கியிருக்கும் வேலையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வருவதற்கு அரசு தடைவிதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details