தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எம்எல்ஏக்களின் வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும்' - methane protest

நாகை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுப்பதற்கு எம்பி, எம்எல்ஏக்கள் குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

'எம்எல்ஏக்களின் வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும்'-பேராசிரியர் த.ஜெயராமன்

By

Published : May 20, 2019, 9:08 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

பின் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது, "ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் மே 28ஆம் தேதி முதல் கிராமங்களுக்கு சென்று பரப்புரை ஆற்ற உள்ளோம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை ஹைட்ரோகார்பனை எதிர்க்கக்கூடிய அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி ஒன்றாக போராடப் போகிறோம்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்களவை, சட்டப்பேரவையில் குரலெழுப்ப வேண்டும். இல்லையெனில் அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

மேலும் உயர் நீதிமன்ற அனுமதியுடன் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்ட் 17ஆம் தேதி மயிலாடுதுறையில் காவிரிப்படுகை பாதுகாப்பு மாநாடு நடத்த இருக்கிறோம்" என தெரிவித்தார்.

'எம்எல்ஏக்கள் வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும்'-பேராசிரியர் த.ஜெயராமன்

ABOUT THE AUTHOR

...view details