பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செம்பனார்கோயிலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நீண்டகால பிரச்சனையான காவிரி நீர்ப் பிரச்சனையை தீர்க்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். அதன் பின்னர் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சமே இருக்காது. அண்டை மாநிலங்களை நம்ப வேண்டிய நிலை இருக்காது.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்! - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நாகை: ஏற்கனவே அதிமுக அரசு தள்ளுபடி செய்துவிட்ட விவசாயக் கடன்களை, திமுக ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்வோம் என மு.க.ஸ்டாலின் ஏமாற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி என்பதால்தான், தற்போது மனுக்களை வாங்க பெட்டிகளை எடுத்துச் செல்கிறார் ஸ்டாலின். கடந்த 2019ல் மக்களிடம் மனுக்களை வாங்கி ஏமாற்றியவர்தான் இந்த ஸ்டாலின். தற்போதும் அந்த வித்தையை அவர் காட்டுகிறார். ஆனால் இம்முறை அது எடுபடாது. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களையும் அதிமுக அரசு தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி விட்டது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக ஸ்டாலின் ஏமாற்றுகிறார்” என்றார்.
இதையும் படிங்க:‘அதிமுகவினர் மீது தீர்ப்புகள் வந்தாலே அவர்களது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்’