ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, மண்டபம் ஆர்.எஸ். மங்களம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கான முதல்கட்டத் தேர்தல், 813 வாக்குச் சாவடிகளில் காலை7 மணிக்கு தொடங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஓம் சக்தி நகரில் உள்ள ஆல்வின் மெட்ரிக் பள்ளிகளில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக ஐந்து ஒன்றியங்களுக்கு 813 வாக்குச் சாவடிகளில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகளில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.