மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல் பெருகியதால் கடல் நீர் சுமார் 50 அடி வரை உள்புகுந்துள்ளது. இதன் காரணமாக கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை மீனவர்கள் டிராக்டர் மூலம் இழுத்து வந்து மீன் விற்பனை தளத்தில் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி அருகே ஊருக்குள் புகுந்த நீர் - கிராமத்திற்குள் புகுந்த தண்ணீர்
தரங்கம்பாடி அருகே கடல் சீற்றம் காரணமாக கடல் பெருகியதால் 50 அடி வரை தண்ணீர் மீனவ கிராமத்தில் புகுந்துள்ளது.
Etv Bharat
ஆண்டுதோறும் புயல் காலங்களில் இதேபோல் கடல் உள்வாங்குவது இந்த கிராமத்தில் வாடிக்கையாக உள்ளது. இதனால், கடும் சிரமத்தைச் சந்திக்கும் மீனவர்கள் தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து கடல் நீர் உட்புகாமல் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மாண்டஸ் புயல்: நாளை(டிச.10) பள்ளிகளுக்கு விடுமுறை?