தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெலங்கானாவில் தவிக்கும் சிற்பக் கலைஞர்கள்: வாட்ஸ் அப் மூலம் அரசிடம் கோரிக்கை! - Nagai District News

நாகை: ஊரடங்கு காரணமாக தெலங்கானாவில் சிக்கி தவிக்கும் 13 சிற்பக் கலைஞர்கள் தங்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல தமிழ்நாடு அரசுக்கு வாட்ஸ்அப் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப் மூலம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கூலி தொழிலாளர்கள்
வாட்ஸ் அப் மூலம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கூலி தொழிலாளர்கள்

By

Published : May 1, 2020, 2:15 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த 13 பேர், தெலங்கானா நிஜாம்பாத் அண்ணாவரம் கிராமத்தில் கோவில் சிற்ப வேலைக்காக சென்றுள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வேலை இல்லாமல், வருமானமின்றி சிற்பவேலை செய்த கோவிலிலேயே தங்கியுள்ளதாகவும், அன்றாட உணவுக்கே வழியில்லாமல் திண்டாடுவதாகவும் கூறியுள்ள தொழிலாளர்கள், தங்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசுக்கு வாட்ஸ் அப் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெலங்கானாவில் தவிக்கும் கூலி தொழிலாளர்கள்

இதேபோல் ஓசூரில் சிக்கியுள்ள தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூரை சோந்த சிற்பக் கலைஞர்கள் 6 பேர் சொந்த ஊருக்கு வருவதற்கு நடடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனாவால் வாழ்வு திசைமாறிய புலம்பெயர் தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details