தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட குடிமராமத்துப் பணிகள்

நாகப்பட்டினம்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகள் நிகழ்ச்சியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிமராமத்துப் பணிகள் நிகழ்ச்சி
குடிமராமத்துப் பணிகள் நிகழ்ச்சி

By

Published : May 16, 2020, 7:58 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், புத்தகரம் முடிகொண்டான் ஆற்றில் பழுதடைந்துள்ள புத்தகரம் நீர்த்தேக்கத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகளை கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று தொடங்கி வைத்தார்.

இதில் கட்சிக் கூட்டத்திற்கு திரள்வது போல, அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். மேலும், கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளில் வழிபாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்தும் குடிமராமத்து பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் முன்னின்று நடத்தினார்.

இதைக் கண்ட பொதுமக்கள் அரசு ஊரடங்கு உத்தரவு பொதுமக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? ஆளுங்கட்சிக்கு பொருந்தாதா? என புலம்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: விதிமுறைகள் மீறல்: சேலத்தில் கடைகளுக்குச் சீல்வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details