தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை நேர பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு முடி திருத்திய விஜய் மக்கள் இயக்கம்! - actor vijay

மயிலாடுதுறையில் மாலை நேர பாடசாலையில் படிக்கும் மாணவர்களின் முடியை திருத்தி ஒழுங்குபடுத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர்.

vijay-makkal-iyakkam-organized-haircuts-for-the-students
மாணவர்களுக்கு முடி திருத்திய.... விஜய் மக்கள் இயக்கத்தினர்

By

Published : Jul 23, 2023, 11:03 PM IST

மாணவர்களுக்கு முடி திருத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர்

மயிலாடுதுறை :அரசியலில் கால் பதிப்பதற்கான முன்னெடுப்புகளை நடிகர் விஜய் பலவேறு விதத்தில் மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக,அண்மையில் உலக பட்டினி தினத்தன்று அனைத்து தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் ஏழை மக்களுக்கு உணவு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று சிறப்பிடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில், சென்னை நீலாங்கரையில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி, நடிகர் விஜய் மாணவர்களைச் சந்தித்துப் பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் விஜய் பயிலகம் தொடங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் முதற்கட்டமாக கன்னியாகுமரியில் 4, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா 3, சென்னை, சேலம், கோவை, திருச்சியில் தலா 1 என 14 இடங்களில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மயிலாடுதுறை அருகே ஐவநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோத்தமங்கலம் கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பயிலகம் தொடங்கி வைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்குப் பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

அதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு வெறுமனே மாலை நேர வகுப்பு எடுத்து பாடம் சொல்லித் தருவதுடன் எங்கள் வேலை முடிந்துவிடவில்லை என்று, வரிந்து கட்டிக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தயாராகின்றனர் மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இந்நிலையில், சோத்தமங்கலம் கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 20 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட மாலை நேர பாடசாலையில் வகுப்பில் தற்போது 40க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களில் பலர் முடி திருத்தம் செய்து கொள்ளாமல் இருப்பதை உணர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அவர்களில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை, அருகில் உள்ள நகரமான மணல்மேட்டுக்கு அழைத்துச் சென்று அவர்கள் அனைவருக்கும் இன்று முடி திருத்தம் செய்து, மீண்டும் அழைத்து வந்து மாணவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று விட்டனர். இவர்களது நடவடிக்கையை கிராம மக்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளது.

இதையும் படிங்க :Kanguva First Look : கங்குவா பர்ஸ்ட் லுக்கில் மிரட்டும் சூர்யா!

ABOUT THE AUTHOR

...view details