இந்தியாவில் கரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.