மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், ரயில்வே, வங்கி, தபால் நிலையங்களில் வடமாநில இளைஞர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அரசுப்பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வேண்டும் - விசிக ஆர்ப்பாட்டம் - அரசு வேலைகள்
நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
![அரசுப்பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வேண்டும் - விசிக ஆர்ப்பாட்டம் Viduthalai chiruthaigal katchi protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:23:23:1598259203-tn-ngp-02a-vck-protest-script-tn10023-hd-24082020131245-2408f-00811-375.jpg)
Viduthalai chiruthaigal katchi protest
மேலும் இந்தி திணிப்புக்கு மத்திய அரசுக்கு மாநில அரசு உடந்தையாக இருப்பதை கண்டித்தும், தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளாக அரசு பணி தேர்வு நடத்தாமல் இருப்பதால் தேர்வு எழுதும் நபர்களின் வயது வரம்பு 30 லிருந்து 32 ஆக உயர்த்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.