தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு முதல் புதிய படிப்புகள்' - துணைவேந்தர் பார்த்தசாரதி - துணைவேந்தர் பார்த்தசாரதி பேட்டி

தொலைநிலைக்கல்வியில் நடப்பாண்டு முதல் டாக்டர் ஆப் லிட்டரேச்சர், டாக்டர் ஆப் சயின்ஸ் உள்ளிட்ட புதிய படிப்புகள் தொடங்கப்படவுள்ளன என திறந்தநிலை பல்கலைக்கழக துணை வேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் பார்த்தசாரதி
செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் பார்த்தசாரதி

By

Published : Dec 23, 2021, 11:06 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மண்டல மையத்தினை துணைவேந்தர் பார்த்தசாரதி இன்று (டிசம்பர் 23) தொடங்கிவைத்தார்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை ஒருங்கிணைந்து இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தலைமை வகித்து மையத்தைத் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் பார்த்தசாரதி

புதிய பட்டப்படிப்புகள் தொடக்கம்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் எட்டு மண்டல மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சிவகங்கை, சேலம் ஆகிய இடங்களில் நான்கு மண்டல மையங்களை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மயிலாடுதுறையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. தொலைநிலைக்கல்வியில் 81 விதமான படிப்புகள் யூஜிசி அங்கீகாரம் கொடுத்த வகுப்புகளை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, எம்.பில், முனைவர் மற்றும் இந்த ஆண்டு முதல் புதிதாக டாக்டரேட் முடித்தபிறகு டாக்டர் ஆப் லிட்டரேச்சர், டாக்டர் ஆப் சயின்ஸும் கொண்டு வந்துள்ளோம்.

இதில் படிக்கக்கூடிய அனைத்தும் அரசு வேலைவாய்ப்பிற்கு உகந்தது. திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படிப்பதால் மாணவர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்” என்றார்.

தொடர்ந்து மயிலாடுதுறை மையத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்கான மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் இணை இயக்குநர் அறிவுடைநம்பி, விரிவாக்க கல்விப்புலம் தலைவர் தியாகராஜன், இணை இயக்குநர் தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:Chennai Corporation: தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details