தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர் இல்லாமல் செயல்படும் கால்நடை மருத்துவமனை!

நாகை: அனைத்து வசதிகளும் கொண்ட மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனை 3 ஆண்டுகளாக மருத்துவர் இல்லாமல் செயல்பட்டுவருகிறது.

Veterinary Hospital operating without doctor for 3 years in nagai
Veterinary Hospital operating without doctor for 3 years in nagai

By

Published : May 5, 2020, 3:05 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை, உதவி இயக்குநர் அலுவலகம், அறுவை சிகிச்சை, சினையூட்டுதல், கால்நடைகளை தங்க வைத்து மருத்துவம் பார்க்கும் வசதி என அனைத்தையும் உள்ளடக்கி மூன்று ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டுவருகிறது.

இங்கு, மயிலாடுதுறை நகரில் வசிக்கும் ஒரு லட்சம் மக்கள் மட்டுமின்றி நகரை ஒட்டி அமைந்துள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது ஆடு, மாடு, கோழி, வளர்ப்பு நாய் போன்ற கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்துவந்தனர்.

மருத்துவர்கள், உதவியாளர்கள் என பத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த இந்த மருத்துவமனையில் தற்போது முதுநிலை மேற்பார்வையாளர் ஒருவர் மட்டுமே பணியாற்றிவருகிறார்.

கால்நடை மருத்துவர் நியமிக்காததால் உதவி இயக்குனராக பணிபுரியவரும் பிரதம மருத்துவரே, கால்நடைகளுக்கும் மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதம மருத்துவரும் நியமிக்கப்படாமல் உள்ளது.

அதுமட்டுமின்றி, மூன்று கால்நடை உதவியாளர்களுக்கான இடங்களும் காலியாகி பல வருடங்களாவதாகவும், தற்போதுவரை அலுவலக உதவியாளர்களும் பணியமர்த்தப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், இதனால் மருத்துவமனை வளாகம் பாழடைந்து குப்பைகள் நிறைந்து சுகாதாரமின்றி காணப்படுகிறது என்றனர்.

பலமுறை மருத்துவர்களை நியமிப்பது குறித்து புகாரளித்தும் உதவியாளர்கூட நியமிக்கப்படவில்லை என்றும், கரோனா வைரஸ் விலங்குகள் மூலமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ள நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விலங்குகள் மூலம் கரோனா பரவல்: தயார் நிலையில் அரசு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details